ஜாகார்த்தா,ஜனவரி-12, இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் ஆசிரியையின் பாலியல் தொல்லைக்கு ஆளாகி 15 வயது மாணவன் பெரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இதனால் அந்த 9-ம் வகுப்பு மாணவன் பள்ளிக்குச் செல்லவே பயப்படுவதாகக் கூறப்படுகிறது.
ST என மட்டுமே அடையாளம் கூறப்பட்ட அந்த சமய ஆசிரியை, தனது வீட்டில் கடந்த ஈராண்டுகளாகவே அப்பையனைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இத்தனை நாளாக அல்-குர்ஆன் கற்கவே அம்மாணவன் ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று வந்ததாக அக்கம்பக்கத்தார் நினைத்திருந்தனர்.
எனினும், மாணவனை அவர் கட்டாயப்படுத்தி உடலுறவுக் கொள்ள வைத்தது ஒரு நாள் அம்பலமானது.
சந்தேகத்தில் வீட்டுக்குள் நுழைந்த கிராம மக்கள், பார்க்கக் கூடாத கோலத்தில் குளியறையில் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து ஆசிரியை கைதானார்; மாணவனை வற்புறுத்தி குறைந்தது 10 தடவையாவது அவர் உடலுறவு கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.