
கோலாலம்பூர், பிப்ரவரி-2 – பத்துமலை தைப்பூசத்தில் பால்குடங்களை ஏந்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவோருக்கு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
அதாவது, பால் சிந்தா வண்ணம், குடங்களில் துணியை வைத்து கட்டும் போது ஒரு கட்டுக் கட்டினால் போதும்;
பல கட்டுகளைக் கட்டுவதைத் தவிர்க்குமாறு தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரும்பாலும் பக்தர்கள் குடத்தைச் சுற்றி பல கட்டுகளைக் கட்டி விடுகின்றனர்; இதனால் மலைக் குகையை அடைந்ததும் அவற்றை அவிழ்க்க சற்று நேரமாகிறது.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் இது மேலும் நெரிசலை உண்டாக்குகிறது.
எனவே, இவ்வாண்டு பால்குடமேந்தும் பக்க மெய்யன்பர்கள் குடத்தை ஒரு கட்டுக் கட்டி வந்தால், கயிற்றையோ கம்பியையோ வெட்டுவதற்கு எளிதாக இருக்கும்.
நேரமும் மிச்சப்படும், நெரிசலையும் தவிர்க்கலாம் என, தான் ஸ்ரீ நடராஜா அறிவுறுத்தினார்.