
ஜோர்ஜ் டவுன் , பிப் 17 – பொது இடத்தில் தலைக்கவசத்தை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக ஆறு ஆடவர்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அச்சம்பவத்தில் மூவர் காயம் அடைந்தனர். 19 முதல் 29 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.
பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை மணி 1.32 அளவில் பத்து பிரங்கி ( Batu Ferringhi ) லைட் ஹைவுஸ் (Light House) கார் நிறுத்தும் பகுதியில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் சித்தி நுருல் சுஹைய்லா பஹ்ரெய்ன் (Siti Nurul Suhaila Baharin) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் தலா 3,500 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு அவர்கள் மீதான குற்றச்சாட்டு மார்ச் 19 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.