
நிபோங் திபால், ஆகஸ்ட்-17-பினாங்கு நிபோங் திபாலில், போலீஸார் நடத்திய சோதனையில், ஹெரோய்ன் வகைப் போதைப்பொருளைத் தயாரிக்கும் கூடமாக குடியிருக்கும் வீடொன்று செயல்பட்டு வந்தது அம்பலமானது.
Taman Tambun Permai-யில் செவ்வாய்க்கிழமை மாலை அச்சோதனை நடத்தப்பட்டது.அதில், ஓர் இலங்கை ஆடவர் உட்பட மூன்று ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் தயாரிப்பதை முதன்மை சந்தேக நபர் ஒப்புக் கொண்ட வேளை, மற்ற இருவர் போதைப்பொருள் மற்றும் இரசாயனங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
1.1 கிலோ கிராம் எடையிலான ஹெரோய்ன் போதைப்பொருளும் 30 கிலோ கிராம் cafein போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன.
Toyota Vellfire, Honda Civic கார்களோடு, Yamaha LC135 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் மூவரும் ஆகஸ்ட் 19 வரை விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.