
சுங்கை பாக்கார், பிப் – 18 – இன்று காலை பினாங்கில், மோட்டார் சைக்கிளும் லோரியும் சம்பந்தப்பட்ட விபத்தில், சுங்கை பாக்காப் தமிழ்பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் மிக மோசமாக காயமுற்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைசே சேர்ந்த அவ்விருவரில், 5 வயது சிறுமியின் வலது கால் துண்டானதோடு ஆறு வயது சிறுவனின் இடது கை முறிவுக்கும் பலத்த காயத்திற்கும் உள்ளானது .
இந்த விபத்தில் அந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற அந்த சிறார்களின் பாட்டியும் காயத்திற்கு உள்ளானதால் அம்மூவரும் செபெராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே காயம் அடைந்த சிறார்களை செனட்டர் டாக்டர் லிங்ககேஸ்வரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டதோடு அச்சிறார்களின் நிலவரங்களை கேட்டறிந்ததோடு அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
அந்த சிறுவனும் , சிறுமியும் அவர்களது அத்தையின் பராமரிப்பில் இருந்து வருவதாக தெரிகிறது.
பாலர் பள்ளியில் பயின்றுவரும் அந்த சிறுமியின் வலது கால் முழுமையாக துண்டாகி விட்டதால் செயற்கை கால் உதவி பொருத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பதாக லிங்கேஸ்வரன் கூறினார்.