
பாலேக் பூலாவ் , மார்ச் 14 – தனது நண்பரின் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் பரிசோதனை முகப்பிடத்தில் நகைச்சுவையாக கூறிய வர்த்தகர் ஒருவருக்கு 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று நாள் சிறை தண்டனையை அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாஜிஸ்திரேட் Chia Huey Ting முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 64 வயதுடைய Ng Kok Yeow குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மார்ச் 11 ஆம தேதி இரவு 10 .30 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில்
அறிக்கை வெளியிட்ட குற்றத்தை இங் ஒப்புக்கொண்டார்.
1955 ஆம் ஆண்டின் சிறு குற்றங்கள் சட்த்தின் 14 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.