Latestஉலகம்

பிரிட்டனுக்கான தனது 2ஆவது வருகை வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – டிரம்ப் பெருமிதம்

லண்டன், செப்-18,

பிரிட்டனுக்கு தாம் மேற்கொண்ட இரண்டாவது வருகை வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump ) தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனுக்கான வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணத்தின் முதல் முழு நாளை நிறைவு செய்யும் விதமாக, புதன்கிழமை வின்ட்சர் (Windsor) கோட்டையில் டொனால்ட் டிரம்பிற்கு ஆடம்பரமான அரசாங்க விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த ஆடம்பர நிகழ்வின் தொடக்கத்தில் சுமார் 160 விருந்தினர்களுக்கு முன்பாக, அமைதியைத் தேடுவதில் தனிப்பட்ட அர்ப்பணிப்பு என்று மன்னர் Charles 111 தன்னை அழைத்ததையும் டொனல்ட் டிரம்ப் பாராட்டினார்.

இந்த வருகை தனது வாழ்கையின் மிக உயர்ந்த மரியாதைகளில் ஒன்று என்றும் அவர் வருணித்தார்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை ஒரே தொனியில் இரண்டு குறிப்புகள், ஒவ்வொன்றும் தனித்தனியாக அழகாக இருக்கின்றன, ஆனால் உண்மையில் ஒன்றாக இசைக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டதன் மூலம் Atlantic கடல் கடந்த உறவுக்கு டிரம்ப் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு ( Melania ) அரசாங்க மரியாதையுடன் கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபரும் முதல் பெண்மணியும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பிறகு, விண்ட்சரில் ( Windsor ) அரியணைக்கு வாரிசான இளவரசர் William மற்றும் அவரது மனைவி Catherine ஆகியோர் வரவேற்றனர்.

பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் ,ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்ப் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதால், Williamமும் Catherinனும் டிரம்ப் மற்றும் அவரது மனைவியுடன் சிறிது தூரம் நடந்து சென்று காத்திருந்த சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை (Camilla ) சந்தித்தனர்.

அடுத்த ஆண்டு அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக அரச குடும்பத்தினர் டிரம்பிற்கு ஒரு புத்தகத்தை வழங்கினர்.

அதே வேளையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Dwight Eisenhowerருக்கு சொந்தமான வாளின் பிரதியை மன்னர் சார்லஸ்ஸிற்கு டிரம்ப் பரிசளித்தார்

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!