Latest

புக்கிட் பிந்தாங் மோனோரேல் தண்டவாளத்தின் குறுக்கே கடந்துச் சென்ற ஆடவன் தேடப்படுகிறான்

கோலாலம்பூர், செப்டம்பர்-27 – கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மோனோரேல் தண்டவாளத்தில் குதித்து குறுக்கே கடந்துச் சென்று வைரலான ஆடவனை போலீஸ் தேடி வருகிறது.

சில தினங்களாகவே பரவி வரும் அந்த வைரல் வீடியோ குறித்து, Prasarana Malaysia தரப்பு நேற்று முன்தினம் புகார் செய்ததாக, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Sulizmie Affendy Sulaiman கூறினார்.

சம்பவத்தன்று அந்நபரை கண்டுபிடிக்க Prasarana உதவி போலீசார் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட ஆடவரின் அடையாளமும் உறுதிச்செய்யப்படவில்லை.

இந்நிலையில் விசாரணைகள் தொடருவதாகக் கூறிய போலீஸ், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால், முன்வந்து தகவல்களைக் கொடுத்துதவுமாறு கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!