Latestமலேசியா

புக்கிட் பெருந்தோங்கில் நிலச்சரிவு; பாதையை மூடிய உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம்

உலு சிலாங்கூர், அக்டோபர்-8 – உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங்கில் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்யும் பணிகள், துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவ இடமான Jalan Kemboja 3 வீடமைப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரப் பணிகளும் அதிலடங்குமென, உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPHS) கூறியது.

குறிப்பாக குடியிருப்பாளர்களின் வீடுகளின் பின்பக்க பாதைகள் பாதுகாப்புக் கருதி உடனடியாக மூடப்பட்டன.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கும் மக்களின் வீடுகளுக்கும் 7 மீட்டர் தொலைவே இருக்கின்றது.

அங்கு சிறு சிறு நிலச்சரிவு சம்பங்கள் தொடர்ந்து ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

நிலச்சரிவு பகுதி விரைந்து சீரமைக்கப்படாவிட்டால், பங்களா வீடொன்று பெரும் ஆபத்திலிருப்பதாகவும் MPHS தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!