
வாஷிங்டன் , டிச 23 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது பெயரில் புதிய வகை ஆயுதமேந்திய போர்க்கப்பல்களை அறிவித்தார்.
இது வழக்கமாக பதவியில் இருந்து விலகிய அமெரிக்கத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மரியாதையாகும். டிரம்ப் வகை கப்பல்களில் இரண்டு தொடக்கமாக கட்டப்படும், ஆனால் எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று அதிபர் தெரிவித்தார்.

அவை மிகவும் ஆபத்தான மேற்பரப்பு போர் கப்பல்களில் சில என்பதோடு , அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ ( Mar-a- Lago ) இல்லத்தில் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், ( Pete Hegseth ) வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ( Marco Rubio ) மற்றும் கடற்படை செயலாளர் ஜான் பெலன் ( John Phelan ) ஆகியோருடன் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது திட்டமிடப்பட்ட உயர் தொழில்நுட்ப கப்பல்களின் படங்கள் அருகிலுள்ள ஸ்டாண்டுகளில் வைக்கப்பட்டிருந்தன.
கப்பல்கள் 30,000 முதல் 40,000 டன் வரை எடையுள்ளதாக இருக்கும் என்பதோடு ஏவுகணைகள் , துப்பாக்கிகள், லேசர்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகள் போன்ற இன்னும் வளர்ச்சியில் உள்ள ஆயுதங்களை அவை கொண்டிருக்கும் .
தற்போது உருவாக்கத்தில் உள்ள அணு ஆயுதம் ஏந்திய கப்பல் , கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் என்று டிரம்ப் தெரிவித்தார்.



