Latestமலேசியா

பெர்சாத்து பொதுச் செயலாளர் பதவியை அஸ்மின் அலி ஏற்றுக் கொண்டார்; முஹிடின் தகவல்

கோலாலம்பூர், நவம்பர்-26 – பெர்சாத்து கட்சியின் புதியப் பொதுச் செயலாளராக டத்தோ ஸ்ரீ மொஹமட் அஸ்மின் அலி நியமிக்கப்படுகிறார்.

அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அதனை Sinar Harian மலாய் நாளேட்டிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அஸ்மினுடன் மனம் விட்டு பேசியதில், அந்த உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அதற்கு இணக்கம் தெரிவித்ததாக முஹிடின் சொன்னார்.

பெர்சாத்துவை, சிறந்த நிர்வாகத் திறமையுள்ள கட்சியாகவும் ஊழலற்ற அரசியல் அமைப்பாகவும் நிலை நிறுத்த அஸ்மினின் நியமனம் துணைபுரியுமென்றார் அவர்.

பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுப்பேரவையின் போதோ அல்லது அதற்கு பிறகோ அஸ்மினின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாமென முஹிடின் கோடி காட்டினார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் சிலாங்கூரைக் கைப்பற்றும் முயற்சியில், அம்மாநில பெரிக்காத்தான் நேஷனலை வலுப்படுத்தப் போவதாகக் கூறி, இதற்கு முன் அந்த பொதுச் செயலாளர் பதவியை அஸ்மின் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!