
கோலாலம்பூர், செப்டம்பர்-12 – Threads-இல் வைரலான ஒரு வீடியோ, மலேசியர்களை அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
ஒரு பெண், பொரித்த கோழி இறைச்சியைப் பிரித்தபோது, அதற்குள் இரும்பு நட்டு ஒன்று சிக்கியிருந்ததே அதற்குக் காரணம்.
அந்த நட்டு தெளிவாக தெரியும் படி உள்ள புகைப்படத்தையும் அவர் பகிர்ந்ததால், உணவு பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.
ஆனால், பலர் நகைச்சுவை பாணியில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர், “இந்த கோழி என் நோயாளி… விபத்தில் எலும்பு முறிந்ததால் நட்டு போட்டேன்” என்று சிரிக்க வைத்தார்.
மற்றொருவர், “அதிக வேகமாக பறந்ததால் தான் விபத்து… அதனால் நட்டு தேவைப்பட்டிருக்கும்” என்று கிண்டலாக பதிவிட்டார்.
சிலர், நல்ல வேளையாக அப்பெண் நட்டை விழுங்காதது அதிர்ஷ்டம் எனக் கூறினர்.
இன்னொருவர், “இப்போது கோழி விலை அதிகம்… அதனால் மெக்கானிக்கல் கோழி தான் கொடுக்கிறார்கள்” என்று பொருளாதார ரீதியாகவும் கிண்டலடித்தார்.
இச்ம்பவம், “கோழிக்குள் நட்டு எப்படி வந்தது?” என்ற கேள்வியை எல்லோரிடமும் எழுப்பியுள்ளது.
ஆனால், பதில் தான் இல்லை…