Latestமலேசியா

பொற்கொல்லர்களுக்குத் தட்டுப்பாடு; நகைத் தொழில் எதிர்காலம் கேள்விக் குறி

கோலாலம்பூர், ஜனவரி-3,  கொடி கட்டி பறந்த மலேசியாவின் தங்க வியாபாரத் தொழில் அந்திம காலத்தை நோக்கிச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஒவ்வொரு 4 நகைக்கடைகளுக்கும் ஒரு பொற்கொல்லர் என்ற சமச்சீரற்ற நிலை நிலவுவதே அதற்குக் காரணமாகும்.

இதையடுத்து, இந்த கைவினைப்பொருளின் எதிர்காலத்தை உறுதிச் செய்யவும், உலகச் சந்தையில் நாட்டின் போட்டித்தன்மையை தக்கவைக்கவும், பொற்கொல்லர் தொழிலில் TVET எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சியை அமுல்படுத்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தங்க கைவினைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அந்த TVET பயிற்சிகள் அவசியமாவதாக, மலேசிய பொற்கொல்லர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ச்சியா ஹோக் இயூ (Datuk Chiah Hock Yew) கூறினார்.

இவ்வேளையில், மலேசிய இந்திய பொற்கொல்லர் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் அப்துல் ரசாக் (Datuk Abdul Rasul Abdul Razak) கூறுகையில், திறமையை தக்கவைப்பதே முக்கிய சவாலாக இருக்கும் என்றார்.

TVET-டில் இதுபோன்ற பயிற்சியை அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும், பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடித்தவுடன் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதிசெய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

“பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் பொற்கொல்லர் வகுப்புகளைக் கொண்டிருந்தோம், ஆனால் அவர்களில் எத்தனை பேர் நாட்டில் இருக்கின்றனர்? “என்று ரசூல் கேள்வி எழுப்பினார்.

பொதுவாக, நகைக்கடைக்காரர்களுக்கான சம்பளம் RM1,500-லிருந்து தொடங்கும்; அவர்கள் வேலையில் பயிற்சி பெறுவதால், அவர்களின் திறன் முன்னேற்றத்திற்கேற்ப இந்தத் தொகை அதிகரிக்கும்.

ஆனால் TVET பட்டதாரிகளுக்கு தொடக்கச் சம்பளமாக 2,500 ரிங்கிட்டிலிருந்து 4,000 ரிங்கிட் வரை வழங்க வேணேடுமென்ற பரிந்துரை, தங்கத் தொழிலுக்கு சரிவராது; காரணம் மேலாளர் நிலையிலான ஊழியர்களுக்கே 3,000 ரிங்கிட் சம்பளம் தான் என The Star-ரிடம் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!