
கோலாலம்பூர், பிப் 17 – லெஜென்டரி ரைடர்ஸ் ஏற்பாட்டில் போட்டிக்சன் தேசிய வகை அரச மலாய் ராணுவ முகாம் தமிழ் பாலர் பள்ளிக்கு ( Sek . Jen, Keb. (Tamil) Kem Askar Melayu Diraja ) ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன கருவி, ஒலிபெருக்கி சாதனம், நீர் சுத்திகரிப்பு கருவி, மின்சார சமையல் பாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.
அந்த கிளப்பின் செயலாளர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி உரையாற்றினார்.
மாணவர்களின் அடிப்படைக் கல்விக்கு பாலர் பள்ளி மிகவும் முக்கியமானது என்பதால் அவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு மின்னியல் சாதனங்கள் வழங்கிய லெஜென்டரி ரைடர்ஸ் கிளப்பை அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை உரையாற்றிய காவல் துறையின் அதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ். ராமா ராவ் லெஜென்டரி ரைடர்ஸ் தமிழ் பள்ளிக்கு உதவுவது தலையாய கடமை என்றார்.
இந்த பள்ளியின் பாலர் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட மின்னியல் சாதனங்கள் பெரும் பயனாக இருக்கும் என்று லெஜென்டரி ரைடர்ஸ் கிளப்பின் ஆலோசகர் டாக்டர் சுகுமாரன் வலியுறுத்தினார்.
இதனிடையே தங்களது இயக்கம் வழங்கியிருக்கும் விவேக தொலைக்காட்சி போன்ற மின்னில் பொருட்கள் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என லெஜென்டரி ரைடர்ஸ் கிளப்பின் தோற்றுவிப்பாளரும் அதன் தலைவருமான மகேந்திரன் தெரிவித்தார்.
இந்த வட்டாரத்திலுள்ள அதிகமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்த பாலர் பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தொழில் அதிபர் பி. சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.