
குளுவாங், செப்டம்பர் -14, ஜோகூர், குளுவாங் தொகுதிக்குட்பட்ட மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும் (BN) பெரிக்காத்தான் நேஷனலுக்கும் (PN) நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த போது, BN வேட்பாளரான குளுவாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Syed Hussien Syed Abdullah-வும், PN வேட்பாளரான குளுவாங் பெர்சாத்து செயலவை உறுப்பினரும் ஜோகூர் முன்னாள் கால்பந்து வீரருமான Haizan Jaafar-ரும் இடைத்தேர்தல் வேட்பாளர்களாக உறுதிச் செய்யப்பட்டனர்.
இன்று முதல் 2 வாரங்கள் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, செப்டம்பர் 28-ல் வாக்களிப்பு நடைபெறும்.
60,074 வாக்காளர்களைக் கொண்ட மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் 7.72 விழுக்காட்டினர் அதாவது சுமார் 5,100 இந்திய வாக்காளர்கள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியத் துருப்புச் சீட்டாக உள்ளனர்.
அம்னோவைச் சேர்ந்த மக்கோத்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
Sharifah Azizah Syed Zain, ஆகஸ்ட் 2-ம் தேதி காலமானதை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.