Latestஉலகம்

மருத்துவ அதிசயம்: ‘துண்டான’ தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்து மருத்துவர்கள் சாதனை

இல்லினாஸ், ஏப்ரல்-22, அமெரிக்கா, இல்லினாஸ் மாநிலத்தில் தலையையும் முதுகெலும்பையும் இணைக்கும் எலும்பு உடைந்துபோய், மரணத்தின் விளிம்புக்கே சென்ற பெண்ணை, கடவுள் போல் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

2005-ஆம் ஆண்டு உடற்பயிற்சி மையத்தில் நண்பர்களுடன் விளையாடிகொண்டிருந்த போது 16 வயது Megan King மோசமான விபத்தில் சிக்கினார்.

10 ஆண்டுகள் கழித்தே அவருக்கு hEDS என்ற மரபணுக் கோளாறு நோய் பாதிப்புக் கண்டறியப்பட்டது;

இதனால் ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் கழுத்து எலும்பு முதுகெலும்பிலிருந்து பிரிந்தது.

Internal dicapitation எனப்படும் இந்நிலை மிகவும் ஆபத்தானதாகும்.

இதையடுத்தே, மண்டை ஓட்டை முதுகெலும்புடன் இணைக்கும் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் தயாராகினர்.

அடுத்தடுத்து 37 அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்ட பிறகே மேகனின் மண்டை அவரது முதுகெலும்புடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டது.

இப்போது சராசரி மனிதர்கள் போல் தலையை மேலும் கீழும் பக்கவாட்டிலும் நகர்த்த முடியா விட்டாலும், அவரால் வாழ்க்கையை வாழ முடிகிறது.

சாதாரணமாக யாருக்காவது இப்பிரச்னை ஏற்பட்டால், மரணம் தான் முடிவாக இருக்கும்.

ஆனால், மேகனின் கதையில், மருத்துவர்கள் உருவில் அவர் கடவுளைப் பார்த்திருக்கிறார்.

‘எமனை’ ஏமாற்றி விட்டு ஏராளமானோருக்கு உத்வேகத்தின் வடிவமாகவும் திகழ்கிறார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!