
மலாக்கா, பிப்ரவரி-27 – மலாக்கா, மாலிம், செக்ஷ்ன் 1, தாமான் ஸ்ரீ மங்காவில் உள்ள வீட்டில் இரகசியக் காதலனால் படுகொலை செய்யப்பட்ட பகுதி நேர பாடகியின் உடலில், 14 கத்திக் குத்துக் காயங்கள் கண்டறியப்பட்டன.
அவை முறையே முகத்தில் 3 குத்துகள், நெஞ்சில் 5, இடது கையில் 5, கெண்டைக் காலில் 1 குத்து ஆகும்.
மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் குழுவினர் மேற்கொண்ட சவப்பரிசோதனையில் அது தெரிய தெரிய வந்திருப்பதாக, மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் கிறிஸ்தஃபர் பத்திட் (Christopher Patit) கூறினார்.
இதன் விளைவாக கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு, இதயப் பையில் இரத்தம் தேங்கி, இறுதியில் அம்மாதுவின் மரணத்திற்கு வழிவகுத்தது.
பெருநாடியில் ஏற்பட்ட பயங்கரமான கத்திக் குத்துதான் மரணத்திற்குக் காரணம் என்பதை பிரேத பரிசோதனை உறுதிப்படுத்தியது.
இன்னொருவரின் மனைவியும் 3 குழந்தைகளுக்குத் தாயுமான 52 வயது அம்மாது, வீட்டின் படுக்கையறையில் முன்னதாக இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
அம்மாதுவின் சடலமருகே அமர்ந்திருந்த காதலன் உடனடியாக கைதாகி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.