கோலாலம்பூர், நவம்பர் -14 – ஸ்ட்ரீமிங் சேவைத் தளமான Netflix மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான சந்தா விலைகளை உடனடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இச்சந்தா விலை உயர்வு Netflix-சின் அடிப்படை, தரநிலை, பிரீமியம் மற்றும் மொபைல் திட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.
ஆஸ்ட்ரோவே அந்த விலை உயர்வை உறுதிப்படுத்தியதாக தொழில்நுட்ப செய்தி இணையத் தளமான SoyaCincau தெரிவித்துள்ளது.
அவ்வகையில் அடிப்படை பேக்பேஜ் தொகுப்புக்கான மாத சந்தா 28 ரிங்கிட்டிலிருந்து 29 ரிங்கிட் 90 சென்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
தரநிலை எனப்படும் standard பேக்கேஜின் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலையாக 49 ரிங்கிட் 90 சென் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை அவர்கள் 45 ரிங்கிட்டைச் செலுத்தி வந்தனர்.
நடப்பில் 55 ரிங்கிட்டைச் செலுத்தும் பிரீமியம் வாடிக்கையாளர்கள் இனி 62 ரிங்கிட் 90 சென்னை கட்ட வேண்டியிருக்கும்.
இப்போது 17 ரிங்கிட்டாக இருக்கும் மொபைல் பேக்கேஜ் இனி மாதத்துக்கு 18 ரிங்டிட் 90 சென்னாக இருக்கும்.
வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் standard, premium பேக்கேஜ்களை பகிர்ந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள், அந்த தனிநபர்களுக்கும் தலா 13 ரிங்கிட் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இக்கூடுதல் கட்டணம் முதன்மைக் கணக்கை வைத்திருப்பவருக்கு விதிக்கப்படும்.
என்றாலும் தங்களின் பேக்கேஜ்களில் ஒரு பகுதியாக Nelflix-சை வைத்துள்ள நடப்பு வாடிக்கையாளர்களுக்கு, 2025 மார்ச் 1 வரை கட்டண உயர்வு இருக்காது என தெரிவிக்கப்பட்டது.