Latestமலேசியா

மலேசியாவில் 500 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய டிக் டோக்; AI வருகையே காரணமா?

கோலாலம்பூர், அக்டோபர்-11 – டிக் டோக் சமூக ஊடகத்தின் தாய் நிறுவனமான ByteDance, மலேசியாவில் 500-கும் மேற்பட்ட தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

மின்னஞ்சல் வாயிலாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக The Malaysian Reserve இணைய ஊடகம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலோர் வீடியோ உள்ளடக்கப் பிரிவில் வேலை செய்பவர்கள் ஆவர்.

அவர்களின் பணி தென்கிழக்காசியா மட்டுமின்றி மற்ற வட்டாரங்களையும் உட்படுத்தியதாகும்.

டிக் டோக் உள்ளடக்கங்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்வதில், அந்நிறுவனம் தற்போது AI அதிநவீன தொழில்நுட்பத்தையும் மனித ஆற்றலையும் சேர்ந்தே பயன்படுத்துகிறது.

இரண்டுமே முக்கியமென்றாலும், வருங்காலத்தில் AI தொழில்நுட்பத்தை அதிக சார்ந்திருக்கும் வகையில் டிக் டோக் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும் ஊழியர் பணிநீக்கம் குறித்து அந்நிறுவனம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

கடந்த ஜூன் மாதம் இந்தோனீசியாவில் 450 ஊழியர்களை ByteDance பணிநீக்கியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!