புத்ரா ஜெயா, நவ 19 – வெப் எனப்படும் மின் சிகரெட் விற்பனையை தேசிய நிலையில் தடை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் நிலைநிறுத்துகிறது. ஆனால் அந்தந்த ஊராட்சி மன்றங்களின் தடை மூலம் வெப் விற்பனையை அனுமதிக்காத மாநில அரசின் அணுகுமுறையைத் தடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ
டாக்டர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) தெரிவித்திருக்கிறார். 2024 ஆம் டின் பொது சுகாதார சட்டம் மற்றும் (852 சட்டத்தின் ) சிகரெட் பொருள் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் மின் சிகரெட் விற்பனையை கண்காணிக்கும் நடவடிக்கையை அமைச்சு தொடர்ந்து அமல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
மாநிலங்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்களால் மின் சிகரெட்டுகளை தடை செய்ய முடியவில்லை, எனவே நாங்கள் ஒழுங்குபடுத்தும் அணுகுமுறையை எடுத்துள்ளோம். நிச்சயமாக, முதல் நடவடிக்கை தடை செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஆனால் தடை செய்ய முடியாவிட்டால், நாங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். இப்போதைக்கு ஒற்றுமை அரசாங்கத்திடம் மின்-சிகரெட்டை கட்டுப்படுத்தும் சட்டம் இருப்பதாக 2024 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை (WAAW) கொண்டாடிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது
சுல்கெப்லி தெரிவித்தார்.