Latestமலேசியா

முதல் தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 2026 போட்டி; 10,000 மாணவர்களின் பங்கேற்புடன் மலேசிய சாதனைக்கு முயற்சி

மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC-யின் சிலாங்கூர் கிளை, நாட்டில் முதன் முறையாக தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 2025 எனும் மாபெரும் நிகழ்வை நடத்தவுள்ளது.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில், அடுத்தாண்டு மார்ச் 28-ஆம் தேதி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்குறளை வெறும் மனனம் செய்வது மட்டுமல்லாமல், மாணவர்கள் படித்து புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம் என, சிலாங்கூர் MIYC-யின் கௌரவச் செயலாளரும் திட்ட இயக்குநருமான சசிதரன் பரமசிவன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

தேசிய ரீதியிலான போட்டி என்றாலும், 8 மாநிலங்களில் இப்போட்டி நடத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், தமிழ்ப் பள்ளிகள் என்றில்லாமல் 10 வயது 18 வயது வரையிலான மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம் என்றார் அவர்.

மாணவர்களுக்கு, உணவோடு சேர்த்து கட்டணமாக 70 ரிங்கிட் விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டிக்கு இணை ஏற்பாட்டாளராக Mineapptz நிறுவனம் இணைந்திருப்பது குறித்தும் சசிதரன் கருத்துரைத்தார்.

இவ்வேளையில், இணை ஏற்பாட்டாளராக தாங்களும் இணைந்தது குறித்து, ST Vision Academy நிறுவனத்தின் தோற்றுநரும், Mindappz நிறுவனத்தின் பங்காளியுமான விக்னேஸ்வரன் தங்கையா விளக்கினார்.

மாணவர்களுக்கு என்னென்ன பரிசுகள் வழங்கப்படுமென அவரிடம் கேட்ட போது….

பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் 3 பிரிவுகளின் கீழ் தங்கம், வெள்ளி, வெண்கல விருதுகளைப் பெறுவர் என்றும் அவர் சொன்னார்.

மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகளுக்கான புள்ளிகளையும், இந்த திருக்குள் போட்டி வழங்குகிறது.

வழக்கமான போட்டிகள் போல் ஒரே நாளில் அல்லாமல், இந்த திருக்குறள் போட்டி இரு நாட்களாக தனித்தனியாக நடக்கிறது; அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரே நேரத்தில் 10,000 மாணவர்கள் பங்கேற்கும் போட்டி என்ற மலேசிய சாதனையைப் படைக்கும் முயற்சியையும் இந்நிகழ்வு முன்னெடுப்பதாக, விக்னேஸ்வரன் கூறினார்.

இவ்விழா, திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானத்தையும், அவரது அற்புதமான படைப்பான திருக்குறளையும் கொண்டாடுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!