
உலு திரங்கானு, செப்டம்பர்-24 – திரங்கானு, குவாலா பெராங்கில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில், 29 வகையான பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆடவரை போலீஸார் கைதுச் செய்தனர்.
PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் சிறப்பு உரிமம் எதுவும் அவரிடம் இல்லை.
இதையடுத்து, serindit, murai batu, bayan puling உள்ளிட்ட பறவையினங்களைச் சேர்ந்த அந்த 29 பறவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை அனைத்தும் 2010 விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவை என போலீஸ் சுட்டிக் காட்டியது.
தவிர, 14 பறவைக் கூண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM100,300 ஆகும்.
சந்தேக நபர் தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்; விசாரணை முடிந்ததும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உரிய அனுமதியின்றி காட்டு விலங்குகளை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது கடுமையான குற்றம் என்றும், அது சுற்றுச்சூழல் அமைப்புக்கே அச்சுறுத்தலாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.