காஜாங், அக்டோபர்-1 – Total lost அல்லது முற்றாக பழுதாகிப் போன தங்களது வாகனங்கள் இன்னமும் சாலைகளில் இருப்பதை கண்டால், சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து அதிகாரத் தரப்பிடம் புகாரளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அவ்விவகாரத்தை தாங்கள் கடுமையாகக் கருதுவதாக, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி (Datuk Aedy Fadly Ramli) தெரிவித்தார்.
சாலையில் இருக்க தகுதியற்ற அவ்வாகனங்களைப் பொறுப்பற்ற தரப்பினர் மறு பயனீட்டுக்கு உட்படுத்துவதை கண்டறிய அது அவசியமென்றார் அவர்.
தனது உறவினர் ஒருவர், முழுமையாகப் பழுதாகிப் போன அவரின் கார் சாலையில் பயணிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக டெலிகிராமில் ஒருவர் பகிர்ந்த தகவல் முன்னதாக வைரலானது.
சந்தேகத்தில் MyJPJ செயலியில் பரிசோதனை செய்த போது, 12 ஆண்டுகளுக்கு முன்னரே total lost ஆனதாக அறிவிக்கப்பட்ட காரின் சாலை வரி இன்னமும் செயலில் உள்ளது கண்டறியப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவரும், அதே போல் சூழ்நிலையைச் சந்திக்கும் மற்றவர்களும் போலீசிடமும் JPJ-விடமும் புகாரளிக்க வேண்டுமென டத்தோ ஏடி கேட்டுக் கொண்டார்.