ஜோகூர் பாரு, அக்டோபர்-15, சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்று, உறைய வைக்கப்பட்ட மூசாங் கிங் டுரியான் பழ கொள்முதலில் 26 லட்சம் ரிங்கிட் மோசடிக்கு ஆளாகியுள்ளது.
அந்நிறுவனத்தின் மேலாளரான சீனப் பிரஜை அம்மோசடி குறித்து ஜோகூரில் போலீஸ் புகார் செய்துள்ளார்.
3,840 பெட்டி டுரியான்களை வாங்குவதற்காக, ஜோகூர் பாருவைத் தளமாகக் கொண்ட மலேசிய நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு, அவர் ஜூலை 5-ம் தேதி 26 லட்சம் ரிங்கிட் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
எனினும் சொல்லியபடி ஒரு மாதத்திற்கு மேலாகியும் டுரியான் வந்து சேரவில்லை.
கொள்முதல் ஒப்பந்தம் போட்டவரையும் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஒப்பந்தம் போட்ட நபரான சீன பிரஜை, மலேசியாவைச் சேர்ந்த பழ ஏற்றுமதி நிறுவனமொன்றிடமிருந்து AP எனப்படும் அனுமதிப் பெர்மிட்டுகளை தாம் வைத்திருப்பதாக, பாதிக்கப்பட்ட நிறுவனத்தை நம்ப வைத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டதில், சீன நிறுவனங்களுடன் தங்களுக்கு வர்த்தகம் எதுவுமில்லை என அது கைவிரித்து விட்டது.
இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, மலேசியா வந்து
அம்மேலாளர் போலீசில் புகார் செய்தார்.