Latest

மூவாரில் திருட்டில் ஈடுபட்ட 24 மணி நேரத்திற்குள் இரு பெண்கள் உட்பட மூவர் கைது

மூவார், ஜன 6 – மூவாரில் ஞாயிற்றுக்கிழமையன்று Taman Temiang Utama இல் ஒரு வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த புகார் நண்பகல் மணி 12.15 அளவில் கிடைத்ததோடு அது தொடர்பான 24 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் ( Raiz Mukhliz Azman Aziz) தெரிவித்தார்.

20 வயதுடைய அவர்கள் அனைவரும் ஜாலான் Kim Lee ByPaas சில் இன்று அதிகாலை மணி 12. 07 அளவில் கைது செய்யப்பட்டனர்.

இதன் மூலம் மூவார் மாவட்டத்தில் பதிவான பல திருட்டு சம்பவங்களுக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டதாக போலீசார் நம்புகின்றனர்.

தலைமறைவாக உள்ள சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Raiz முக்லிஸ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!