
புத்ரா ஜெயா, மார்ச் 3 – அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் , குறிப்பாக அன்பளிப்பு பொருட்களில் அதிக செலவுகளைத் தவிர்த்துக் கொண்டு , ரமலான் செலவில் மிதமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்கொடைப் பொருட்களை பொட்டலமிடுவதற்கு அதிக விலையில் செலவு செய்வது குறித்து இன்று பிரதமர் துறையில் மாதந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் கவலை தெரிவித்தார்.
நன்கொடைப் பொருட்கள் குறிப்பாக பேரிச்சம் பழங்களை பொட்டலமிடுவதற்கு சில நேரங்களில் உதவியை விட அதிகமாக செலவாகும் என அவர் சுட்டிக்காட்டினைர்.
ராமலான் மாதம் முழுவதும் அனைத்து அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்ச்சிகளை, அமைச்சுகள் அல்லது துறைகள் ஏற்பாடு செய்தாலும், மிதமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ரமலானின் உண்மையான முக்கியத்துவத்தையும் உணர்வையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நன்கொடை வழங்கும் பொருட்களை ஆடம்பரமான பெட்டிகளை பயன்படுத்தி வழங்குவதால் மக்களுக்கு அதனால் என்ன பயன்?
பொட்டலிங்களின் ஆடம்பரத்தைவிட உண்மையான உதவியில் கவனம் செலுத்துவதுதான் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். மேலும் வளங்கள் தேவைப்படுபவர்களுக்கு சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
நம்பிக்கையை வலுப்படுத்தவும், ஒருமைப்பாட்டை வளர்க்கவும், வசதியற்றவர்களிடம் இரக்கத்தை வளர்க்கவும் ரமலான் காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்வார் கேட்டுக் கொண்டார்.