
கோலாலம்பூர், மார்ச் 17 – லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இரண்டு அதிகாரிகளை எம்.ஏ.சி.சியின் (MACC) கெடா கிளை தடுத்துவைத்துள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்ததற்காக ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக , அந்த நபர்கள் ஒருவரிடம் 1,500 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாக நம்பப்படுவதாக MACC வட்டாரம் தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு நபர்களும் அலோஸ்டாரிலுள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு வாக்குமூலம் கொடுப்பதற்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர் .
அலோஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த இருவருக்கு எதிராக நேற்று எம்.ஏ.சி.சி விண்ணப்பம் செய்துகொண்டதைத் தொடர்ந்து அவர்களை ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிடாயா நோர் ( Siti Norhidayah Noor ) பிறப்பித்தார்.
சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை கெடா எம்.ஏ.சி.சி இயக்குனர் அகமட் நிஷாம் இஸ்மாயில் ( Ahmad Nizam Ismail ) உறுதிப்படுத்தினார்.
2009ஆம் ஆண்டின் எம்.ஏ.சி.சி சட்டத்தின் 16 ஆவது பிரிவு (a ) மற்றும் (b) யின் கீழ் லஞ்சம் கேட்டது மற்றும் லஞ்சம் பெற்றது தொடர்பில் அவர்கள் மீது விசாரண மேற்கொள்ளப்பட்டு வருகிறது.