கோலாலம்பூர், அக்டோபர்-15, பல மாநிலங்களில் ஆண்டு இறுதி வாக்கில் ஏற்படவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது காய்கறிகளின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பது உறுதிச் செய்யப்படும்.
மக்களின் தேவைக்கு உள்ளூரில் பற்றாக்குறை நிலவினால் வெளிநாட்டிலிருந்து அவை இறக்குமதி செய்யப்படும்.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு (Datuk Seri Mohamad Sabu) அவ்வாறு கூறினார்.
மழைக்காலத்தில் விவசாயிகள் அளவில் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்களையும் அமைச்சு கண்காணிக்கும் என்றார் அவர்.
வடகிழக்கு பருவமழையின் போது நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் அடைமழையும் வெள்ளமும் ஏற்பட்டு, காய்கறிகளின் விலைவாசி உயரலாமென ஊடங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.