
செப்பாங், டிசம்பர்-26 – வனவிலங்குக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஏஜண்ட் என நம்பப்படும் நபர், 52 விலங்குகளுடன் KLIA-வில் பிடிபட்டுள்ளார்.
அழிந்துவரும் உயிரினங்களுக்கான 2008 அனைத்துலக வர்த்தக சட்டத்தின் கீழ் அந்நபர் கைதானார்.
அந்த 52 விலங்குகளில் 48 விலங்குகள், மார்மோசெட் எனப்படும் அரிய வகை குள்ளக் குரங்குகள் ஆகும்.
எஞ்சியவை உடல் கறுப்பாகவும் கைக் கால்கள் மட்டும் தங்க நிறத்திலும் காணப்படும் golden-handed tamarins வகை குரங்குகள்.
வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN அவற்றைப் பறிமுதல் செய்தது.
KLIA சுயேச்சை வாணிப மண்டலத்தின் விமான சரக்குக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவ்விலங்குகள் சிக்கின.
Golden-handed tamarins குரங்குகள் பிரேசில் வெப்பமண்டல மழைக்காடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை.
குறிப்பாக அமேசான் மழைக்காடுகளில் அதிகம் காணப்படும்.
அதே சமயம், மார்மோசெட் குள்ளக் குரங்குகள் வடகிழக்கு பிரேசிலில் வாழ்கின்றன.
காடழிப்பு மற்றும் சட்டவிரோத விலங்கு வர்த்தகம் காரணமாக இவ்விரண்டு குரங்கினங்களும் வாழ்விடத்தை இழந்து அழிந்து வருகின்றன.