Latest

வாரிசான் கார்னிவல் @ சலோமா: லனை @ MATIC இணைந்து ரமலான் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோலாலம்பூர், மார்ச் 17 – Rahmat Ramadan : Santunan Ihsan திட்டத்தின் கீழ் புனிதமான நோன்பு மாதத்தில் சிறப்பு நலத்திட்டத்திட்டத்தின் கீழ் உணவு நன்கொடைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை இலவசமாக விநியோகிப்பதன் மூலம் சமூகத்திற்கு பயனளிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சி வாரிசான் கார்னிவல் (WarisanKarnival) @ சலோமா (Saloma) ரமலான் ராயாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது, இது ரமழானின் அழகைக் கொண்டாடவும், சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் ஒரு மாதம் நீடிக்கும்.

யாயாசன் இன்சான் சாகன் (Yayasan Insan Sakan) , யயாசன் முஹிபா ( Yayasan Muhibah), யயாசன் குளோபல் மெஸ்ரா (Yayasan Global
Mesra), மற்றும் சலோமா கோலாலம்பூர் ஆகியோரின் நன்கொடைகளின் விளைவாக, மொத்தம் 1000 பொட்டலங்களைக் கொண்ட Nasi Arab, 1000 பொட்டலங்களைக் கொண்ட Bubur Lambuk , 1000 பேக்கட் அரிசி ஆகியவை பெறுநர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மேலும், வாடிக்கையாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில், அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானின் (Jalan Tuanku Abdul Rahman) வியாபாரிகளுக்கு மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விபாபார அடிப்படை வசதிகளும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!