
சென்னை, ஜனவரி-26 – தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசிப் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
H.வினோத் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் அப்படம் இது நாள் வரை தற்காலிகமாக ‘தளபதி 69’ என அழைக்கப்பட்டு வந்தது.
இன்று அப்படத்தின் first look போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தொண்டர்கள் முன்பாக அவர் செல்பி எடுப்பது போன்ற படம் அதில் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து விஜயின் கடைசிப் படம் அரசியல் கதையை மையமாக கொண்டே வெளிவரும் என்ற கணிப்பு உறுதியாகியுள்ளது.
ஹிந்தி நடிகர் பாபி டியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த அக்டோபரில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) என்ற அரசியல் கட்சியை பிரமாண்டமாகத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க குறி வைத்துள்ளார்.