Latestமலேசியா

விஸ்மா டிரான்ஸிட்டில் பிரச்னை செய்த 2 பாலஸ்தீன பெண்கள் தாயகம் திருப்பி அனுப்பப்படுவர்- தூதர் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர்-5 – கோலாலம்பூர் Wisma Transit கட்டடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி பொது சொத்துகளை சேதப்படுத்திய 2 பாலஸ்தீனப் பெண்களும், விரைவிலேயே காசா திருப்பியனுப்பப்படுவர்.

மலேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் Walid Abu Ali அதனை உறுதிப்படுத்தினார்.

தற்காப்பு அமைச்சுடன் கலந்துபேசியதில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி மறந்த அவ்விருவரின் செயலுக்காக பாலஸ்தீன மக்கள் சார்பில் மலேசியாவிடம் தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக Walid சொன்னார்.

பிடிக்கவில்லை என்றால் தாராளமாக கிளம்பலாம்; உதவி செய்த நாட்டில் இப்படி உபத்திரவம் செய்யக்கூடாது என்றார் அவர்.

Wisma Transit என்பது, இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் காயமடைந்து சிகிச்சைக்காக இங்கு கொண்டு வரப்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் தங்க வைக்கப்பட்டுள்ள இடமாகும்.

இந்நிலையில், அக்கட்டடத்துக்கு வெளியே தங்க அனுமதிக்கப்படாததால் அவர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அவ்விரு பெண்களும் பூச்சாடியை உடைத்தும், மேசையை எட்டி உதைத்தும் சிறிய கலவரத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!