
காஜாங், நவம்பர்-17, காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்டதில், ஒரு மலாய் சமூக ஊடகப் பிரபலம் சுமார் RM360,000 மதிப்பில் நட்டத்தைச் சந்தித்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியதாக, நேற்று காலை 9 மணிக்கு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
மனைவியின் ஏராளமான நகைகளுடன், தான் வைத்திருந்த விலையுயர்ந்த 4 ஹெல்மட்டுகளும் காணாமல் போனதாக, அரசு ஊழியரான 32 வயது புகார்தாரர் கூறினார்.
வீட்டின் பின்புறம் உள்ள ஸ்டோரில் வைக்கப்பட்டிருந்த Yamaha RXZ, Yamaha 135LC V8 ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களும் களவுப்போயின.
இதையடுத்து விசாரணைக்கு உதவும் வகையில் தடயவியல் குழு அவ்வீட்டில் பரிசோதனை நடத்தி வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீஸை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட Nanad Babe எனும் அந்த பெண், வீடு கொள்ளையடிக்கப்பட்டதை படங்களோடு சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்தார்.
பொருட்களையும் மோட்டார் சைக்கிள்களையும் கண்டால் தகவல் கொடுக்குமாறும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.



