Latestமலேசியா

வெள்ளத்தில் ட்ரம் படகு கவிழ்ந்து கிளந்தான் ரக்பி வீரர் உயிரிழப்பு

குவாலா கிராய், டிசம்பர்-19 – கிளந்தான், குவாலா கிராயில், இரப்பர் தோட்டத்தில் புகுந்த வெள்ளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞர், ட்ரம் படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கிளந்தான் ரக்பி வீரருமான Muhammad Syahril Hakimy Sudin நேற்றிரவு 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவ்விளைஞர், ஜோகூர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் விளையாட்டு பள்ளியில் படித்து வந்தவர் ஆவார்.

விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பியவர், நேற்று பிற்பகல் வாக்கில் ட்ரம் தோம்பை படகாக பயன்படுத்தி, மீன் பிடிக்கச் சென்றார்.

ஆனால் டிரம் கவிழ்ந்து, அவர் காணாமல் போனார்.

மாலை 6 மணிக்கு, கிராம மக்கள் அவரது செருப்பு மற்றும் மீன் வலை கரையில் கிடந்ததை கண்டு, தீயணைப்பு – மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், காணாமல் போன இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் 4 மீட்டர் ஆழத்தில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!