
ஹனோய், டிசம்பர் 21-மியன்மாரின் மியாவாடி (Myawaddy) நகரில் வேலை வாய்ப்பு மோசடி கும்பல்களிடம் சிக்கியிருந்த 31 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மியன்மார் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தாய்லாந்து குடிநுழைவுத் துறை உதவியுடன் மலேசியத் தூதரகம் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.
நேற்று மாலை 6 மணிக்கு மேல் கெடா சோதனைச் சாவடியான புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அவர்கள் வந்தடைந்தனர்.
பின்னர், விசாரணைக்காக மலேசிய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மலேசியர்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பல்களிடம் சிக்கி ஏமாந்துள்ளனர்.
எனவே, கவர்ச்சிகரமான சம்பளம் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை முன்பின் யோசிக்காமல்
ஏற்க வேண்டாமென, பொது மக்களைப் போலீஸ் நினைவுறுத்தியுள்ளது.



