
கோலாலம்பூர், ஜூலை 8 – அகதிகள் விவகாரத்திற்கு விரைவாக தீர்வு காணும் முயற்சியாக அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையை தொடங்கும்படி உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. நம்பகரமான தரவுகளை வைத்திருப்பதில் உள்ள சிக்கலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) தெரிவித்தார்.
தற்போது, அகதிகளைப் பதிவு செய்வது ஐ. நா அகதிகளுக்கான ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட போலும் தரவுக்கான பதிவு செயல்முறை நீண்டதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அகதிகளின் பதிவு நடைமுறைக்கு தலைமையேற்கும்படி தேசிய பாதுகாப்பு மன்றமான MKN க்கு உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாக Intan புக்கிட் கியாரா ஆடிட்டோரியத்தில் ‘நமது நாடு, பாதுகாப்பு, ஒரு பகிரப்பட்ட பொறுப்பு’ என்ற கருப்பொருள் கொண்ட Intan அமைச்சரின் உரையாடல் (IMC) 2025 இல் கலந்து கொண்ட பிறகு சைபுடின் இத்தகவலை வெளியிட்டார்.
இதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான நடைமுறைகளை அமைச்சு தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
உள்துறை அமைச்சில் குடிநுழைவுத்துறை போன்ற உட்கட்ட அமைப்பு பயன்படுத்தப்படும் என்பதோடு நாடு முழுவதிலும் இதுபோன்ற 70க்கும் மேற்பட்ட துறைகள் உள்துறை அமைச்சில் இருப்பாக சைபுடின் தெரிவித்தார்.
மூன்று சுற்று பேச்சுக்கள் நடைபெற்ற போதிலும் தங்களது தரப்புக்கும் அகதிகளுக்கான ஐ.நா ஆணைக்குழுவிற்குமிடையே அகதிகள் தரவு குறித்து எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.