ஜோகூர் பாரு, நவ 11 – அடுத்த ஆண்டு முதல் ஜோகூரிலுள்ள சுமார் 300 இந்திய முஸ்லீம் உணவகங்கள் தங்களது உணவகங்களில் உணவுகளின் விலையை 5 விழுக்காடு உயர்த்தவிருக்கின்றன.
மூலப்பொருட்களின் விலை உயர்வினால், நடவடிக்கை செலவினம் அதிகரித்ததால் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படவிருப்பதாக ஜோகூர் மாநில இந்திய முஸ்லிம் தொழில் முனைவர்கள் சங்கத்தின் செயலாளர் உசேய்ன் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறைந்த பட்ச சம்பளாம் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படவிருப்பதால் நடவடிக்கை செலவினம் உயரவிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த விலை உயர்வை அமல்படுத்துவதற்கு முன் நிலைமை ஆராயப்படும்.
எங்களது பிரதான மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கமான பிரெஸ்மாவின் முடிவை பொறுத்தே இது அமையும் என அவர் கூறினார்.
அரசாங்கம் அறிவித்த குறைந்தபட்ச சம்பளத்தை அரசாங்கம் அண்மையில் அதிகாரித்ததைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலை 20 முதல் 30 விழுக்காடுவரை அதிகரிக்கப்படும் என கடந்த வாரம் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ J.கோவிந்தசாமி தெரிவித்திருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் குறைந்த பட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை செலவினம் உயர்ந்தததாகவும் அவர் கூறியிருந்தார்.