
கோலாலம்பூர், நவ 12- அடுத்த வாரம் சீனாவிலிருந்து ஒரு புதிய ஜோடி ராட்சஷ பண்டாக்களை மலேசியா பெறும். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ( Xi Jinping ) மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையுடன் இணைந்து ஏப்ரல் 16 ஆம் தேதி மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய உடன்பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த பண்டா கரடிகளை மலேசியா பெறவிருப்பதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சிய்
( Huang Tiong Sii ) கூறினார்.
இந்தப் புதுப்பிக்கப்பட்ட உடன்பாடு 2025 மற்றும் 2035 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திற்கு மலேசியா ஒரு இளைய ஜோடி ராட்சஷ பாண்டாக்களைப் பெற அனுமதிக்கிறது. புதிய ஜோடி பாண்டாக்கள் அடுத்த வாரம் தேசிய மிருகக்காட்சி சாலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூட்டுப் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக பாண்டா பாதுகாப்பு, இனப்பெருக்கம் துறையில் கூட்டு ஆராய்ச்சியைத் தொடரும் என இன்று நாடாளுமன்றத்தில் தனது அமைச்சுக்கான 2026 பட்ஜெட் விவாதத்தின் இறுதி அமர்வில் Huang Tion Sii தெரிவித்தார்.
வனவிலங்கு பாதுகாப்பில் இரு நாடுகளின் வலுவான இருதரப்பு உறவையும் கூட்டு அர்ப்பணிப்பையும் இந்த ஒத்துழைப்பு பிரதிபலிப்பதால் ,
மலேசிய – சீன நட்பின் அடையாளமாகவும் இது திகழ்கிறது.



