பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -15 – Colors of India குடும்பத்தின் உலகத் தரத்திலான தீபாவளி பெருவிழா மற்றும் மாபெரும் விற்பனைக் கண்காட்சி, பெட்டாலிங் ஜெயா, Tropicana Gardens Mall மாநாட்டு மையத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 11 தொடங்கி 16 வரை நடைபெறும் அவ்விழாவினை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவும் இணைந்து அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
கலகலப்பான விளையாட்டுகள், நடன நிகழ்ச்சிகள், சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சிகள் என தொடக்க விழா களைக்கட்டியது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஒரே இடத்தில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை உங்களுக்கு இது தருகிறது.
தீபாவளிக்கான பாரம்பரியப் புத்தாடைகள் தொடங்கி, மாடர்ன் உடுப்புகள், நகைகள், சாமிப் பொருட்கள், சுகாதார பராமரிப்புப் பொருட்கள், மசாலைத் தூள் என அனைத்து வகை விழாக்கால அம்சங்களும் இங்கே கிடைக்கும்.
சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு அட்டகாசமான பயண பேக்கேஜ்களும் காத்திருக்கின்றன.
அதோடு, உங்களுக்காக ஒரு சமையல் விருந்தும் காத்திருக்கிறது; 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன், பாரம்பரிய இந்திய உணவுகள் முதல் வாயில் நீர் ஊறவைக்கும் இனிப்பு வகைகள் வரை, இந்த திருவிழா வேறு எங்கும் இல்லாத சுவை அனுபவத்தை உங்களுக்கு அளிக்கிறது.
Miss & Mrs Colours of India போட்டியின் அரையிறுதிச் சுற்றுகள், பாடல் திறன் போட்டி 4.0 உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.
அனைத்துலக அளவில் புகழ்பெற்ற 20-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன், உள்ளூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திறமைசாலிகளும் உங்களின் வாரக் கடைசியை மகிழ்விக்கவுள்ளனர்.
மாபெரும் சலுகை விலை வாய்ப்பைத் தவற விட வேண்டாம் என Colors of India பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.
Colors of India-வுக்கு ‘மாபெரும் உள்ளரங்கு தீபாவளி பெருவிற்பனை’ என்ற மலேசியச் சாதனை புத்தகத்தின் அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.