Latestமலேசியா

கூடுதலாக 200க்கும் அதிகமான இளைஞர்களுடன் மேலும் வலுவடைந்துள்ளது பினாங்கு ம.இ.கா

பினாங்கு, செப்டம்பர் 23 – பினாங்கு ம.இ.கா இளைஞர் பிரிவு, இரண்டு மாதங்களுக்குள் 40 வயதிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளது.

இது கட்சிக்குக் கிடைத்த சாதனையாகும் என்று பெருமையுடன் கூறியுள்ளார் ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அர்வின் கிருஷ்ணன்.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தலைவர்களின் முன்னிலையில் ‘ம.இ.கா நோக்கி இளைஞர்களின் பிரவேசம்’ என்ற கருத்தில் பினாங்கு மாநில இளைஞர் பிரிவினர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் உரையாற்றிய பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன், ம.இ.கா நமது தாய் கட்சி; நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் அமர்ந்துதான், பின் படிப்படியாக இன்று மாநில தலைவராக உள்ளேன் என்றார்.

கட்சி என்ன செய்தது என்று கேட்பதற்கு மாறாக நாம் கட்சிக்கு என்ன செய்ய முடியும் என்று உங்களையே கேட்டுக் கொள்வது பலன் தருவதாக அமையும் என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து, உரையாற்றிய பினாங்கு மாநில இளைஞர் பிரிவுத் தலைவரான ரூபன்ராஜ், புதிய உறுப்பினர்களின் உறுதிப்பாட்டைப் பெருமையாகக் கருதுவதாகவும், கட்சியின் போராட்டத்திற்கு உறுப்பினர்கள் ஒத்துழைத்திட வேண்டுமெனவும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அரசியல், கல்வி, பொருளாதாரம் என்ற மூன்று குறிக்கோள்களில் பினாங்கு இளைஞர் அணி பயணிப்போம் எனவும் தமதுரையில் ரூபன்ராஜ் தெரிவித்தார்.

பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு 12 தொகுதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!