
நியூ யோர்க், ஆகஸ்ட்-12
பாதுகாக்கப்பட்ட ஆமையினங்களை அமெரிக்காவிலிருந்து ஹோங் கோங்கிற்கு கடத்த முயன்ற ஒரு சீன பிரஜை, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
850-க்கும் மேற்பட்ட ஆமைகளை 220 பொட்டலங்களில் மறைத்து வைத்து கடத்த முயன்றதை, Wei Qiang Lin நியூ யோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
வாரக்கணக்கான பயணத்திற்காக, அந்த உயிருள்ள ஆமைகள் காலுறைகளில் சுற்றப்பட்டு, “பிளாஸ்டிக் விலங்கு பொம்மைகள்” என லேபலிடப்பட்ட பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1.4 மில்லியன் டாலர் மதிப்பிலான அந்த ஆமைகள் எல்லை பரிசோதனையின் போது அதிகாரிகளிடம் சிக்கின.
அனைத்துலகச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தியத் குற்றத்திற்காக, அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 250,000 டாலர் அபராதம் மற்றும் சிறைவாசத்திற்குப் பிந்தைய 3-ஆண்டு கண்காணிப்பு ஆகியவை அவ்வாடவருக்கு விதிக்கப்படலாம்.
வரும் டிசம்பரில் தண்டனை அறிவிக்கப்படும்.