Latestஉலகம்

அமெரிக்க அதிபர் விமானத் தளத்தில் “சந்தேகத்துக்குரிய பார்சல்”; பலருக்கும் உடல்நலக்குறைவு

வாஷிங்டன், நவம்பர் 7 – அமெரிக்க அதிபரின் விமானமான Air Force One அமைந்துள்ள மேரிலாண்ட் மாநிலத்தின் ‘Joint Base Andrews’ தளத்தில் இன்று ஒரு “suspicious package” எனப்படும் சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்றை திறந்த பின்னர், அப்பகுதியிலிருந்த பலரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

அந்த பெட்டியில் வெள்ளை தூள் போன்ற பொருள் இருப்பதைக் கண்டறிந்த பின்னர், உடனே அக்கட்டிடம் காலி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சீரான உடல்நிலையில் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர்.

அந்த விமானத் தளம் அமெரிக்க அதிபர் பயணிக்கும் முக்கிய தளம் என்றும் சம்பவம் நடந்த கட்டிடமும் அதனை இணைக்கும் மற்றொரு கட்டிடமும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டன என்றும் அறியப்படுகின்றது.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்தவொரு ஆபத்தான பொட்களும் கண்டறியப்படவில்லை. அப்பெட்டியில் அரசியல் பிரச்சாரப் பொருட்கள் இருந்ததென குறிப்பிடப்பட்டது.

இச்சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!