
வாஷிங்டன், அக்டோபர்- 27,
அமெரிக்க கடற்படையின் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தென் சீனக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகின. எனினும் அந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லையென ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதல் சம்பவத்தில் MH-60R Sea Hawk ஹெலிகாப்டர் USS Nimitz விமானந் தாங்கி கப்பலிருந்து வழக்கமான பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டபோது தென் சீனக் கடலில் விழுந்ததாக அமெரிக்க கடற்படையின் பசிபிக் வட்டார தளபத்தியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த மூவரும் தேடும் மற்றும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, தென் சீனக் கடலில் போயிங் (Boeing) FA /-18 F சூப்பர் ஹார்னெட்போர் விமானம் கடலில் விழுந்ததாகவும் , அதுவும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலிலிருந்து வழக்கமான பயிற்சி நடவடிக்கைகளின் போது விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு பணியாளர்களும் அதிலிருந்து வெளியேறி பாதுகாப்பாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாகவும் சீராகவும் உள்ளனர். அந்த இரண்டு சம்பவங்களுக்காக காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க(America) அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஆசியாவிற்கு முதல் முறையாக வருகை மேற்கொண்டபோதும் , மற்றும் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் . பல ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யத் தயாராக இருந்தபோதும் இந்த இரு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன



