Latestமலேசியா

‘அரசியல் நிலைத்தன்மைக்காக’ எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஹம்சா

கோலாலம்பூர், ஏப்ரல்-13-நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

​சனிக்கிழமை தமது பதவி விலகல் கடிதத்தை ஹம்சா சமர்ப்பித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சுரி மொக்தார் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெரிக்காத்தான் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் இன்று மக்களவை சபாநாயகரிடம் வழங்கவுள்ளார்.

​பிப்ரவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அரசியல் நிலைத்தன்மையைக்’ கருத்தில் கொண்டும், எதிர்க்கட்சி கூட்டணியை மறுசீரமைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ​வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன் புதிய தலைவரை நியமிக்க பெரிக்காத்தான் திட்டமிட்டுள்ளது.

மக்களவையில் அதிக இடங்களைக் கொண்டுள்ளதன் அடிப்படையில் பாஸ் கட்சியின் பிரதிநிதி ஒருவரே இந்த இடத்தை நிரப்பவுள்ளது உறுதியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!