Latestமலேசியா

அரச குடும்பத்திற்கு எதிராக இன்ஸ்டாகிராம் மூலம் அவதூறான தகவல் தொடர்பு அனுப்பிய ஆடவனுக்கு RM10,000 அபராதம்

கோலாலம்பூர், ஜன 3 – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அரச குடும்பத்திற்கு எதிராக இன்ஸ்டாகிராம் மூலம் அவதூறான தகவல்தொடர்புகளை அனுப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்ட, தளவாட தொழில்துறையைச் சேர்ந்த தொழிலாளிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

42 வயதுடைய டான் யோங் ஹுவா ( Tan Yong Hua ) அபராதத்தை செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி நீதிபதி Siti Aminah Ghazali உத்தரவிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 7ஆம்தேதிக்கிடையில் வாங்சா மஜு, தாமன் யு-தாண்டில் (Taman U-Thant) உள்ள ஒரு இல்லத்தில் ‘ogbadboyterryt’ என்ற சுயவிவரப் பெயருடன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் Tan இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

1998ஆம் ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதி (1) (a) (சட்டம் 588 ) கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் அரச அமைப்பை மோசமாகவும் அவமதிப்பதாகவும் உணர்ந்து ஒரு செய்தியை உருவாக்கி அனுப்பியுள்ளார்.

மேலும் அதைப் படிக்கும் மக்களுக்கு கோபமும் வேதனையும் ஏற்பட்டது என குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

சமயம் , இனம் மற்றும் அரச அமைப்பு போன்ற விவகாரங்களைத் தொடக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கும் , சமூகத்திற்கும் ஒரு பாடமாக அமைவதற்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி ஹிஜ்ரா வான் அப்துல்லா இதற்கு முன் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!