Latestமலேசியா

அறிவியல் உலகை அசத்தும் சாதனை: வேதியியலின் 118 தனிமங்களின் சின்னங்களைக் கூறும் நான்கு வயது சிறுமி ஜெயமித்ரா

கோலாலம்பூர், டிசம்பர் 18 – அறிவியல் துறை வல்லுநர்களே, தடுமாறும் periodic table எனும் வேதியியல் அட்டவணையிலுள்ள 118 தனிமங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கூறி அசத்துகிறார் பத்துமலை வட்டாரத்தைச் சேர்ந்த, 4 வயது சிறுமி ஜெயமித்ரா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வணக்கம் மலேசியா செய்தியில் வெளியிடப்பட்ட இச்சாதனை, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

இது குறித்து ஜெயமித்ராவின் தாய் டாக்டர் மதிவதனியிடம் வணக்கம் மலேசிய நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது.

முதலில், உலக நாடுகளின் கொடிகளின் பெயர்களை ஒப்புவித்து, சாதனை புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார், ஜெயமித்ரா.

இதனிடையே, விதிவிலக்காக இவ்வருடம் periodic table-லின் 118 தனிமங்களின் பெயர்களை ஒரே நிமிடம் 36 வினாடிகளில் தங்கு தடையின்றி அதன் சின்னங்களைப் பார்த்துக் கூறி, தனது திறமையால் மலேசியா சாதனை புத்தகம் உள்ளிட்ட 4 சாதனை பட்டியல்களில் இடம் பெற்றிருக்கிறார், இவர்.

இச்சாதனைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கமும், சீரான வாழ்நாள் முறைகளே குழந்தையின் மனதிறனை வளர்க்க முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் ஜெயமித்ராவின் தாய் மதிவதனி.

தனிமங்களைத் தொடர்ந்து, சதுரங்க விளையாட்டையும், ஜெயமித்ராவிற்கு கற்றுக் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, அதை வளர்க்க ஊக்குவித்தால், ஜெயமித்ரா போன்ற சாதனையாளர்கள் உலகில் மேலும் அதிகரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!