Latestமலேசியா

அலோர் ஸ்டார் சுங்கை மேரா ஆற்றில் ஆடையின்றி ஆடவர் சடலம் கண்டுபிடிப்பு

அலோஸ்டார், மார்ச் 17 – அலோஸ்டாரிலுள்ள சுங்கை மேரா ஆற்றில் ஆடையின்றி ஆடவரின் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

நேற்று காலை மணி 8.31 அளவில் இந்த சடலம் குறித்த தகவலை பொதுமக்களிடமிருந்து பெற்றதாக கோத்தா ஸ்டார் (Kota Setar) மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சித்தி நோர் சலாவத்தி சஹாட் ( Siti Nor Salawati Saad) தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் இறந்ததாக நம்பப்படும் அந்த ஆடவரின் உடல் அழுதிய நிலையில் இருந்ததாக முன்னோடி விசாரணையில் தெரியவந்தது.

அந்த சடலத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

சவப் பரிசோதனைக்காக அந்த சடலம் சுல்தானா பஹியா (Sultanah Bahiyah) மருத்துவமனையின் தடயயியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது .

இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாக சித்தி நோர் சலாவத்தி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!