புது டெல்லி, நவம்பர்-5 – இந்திய ஆகாயப் படைக்குச் சொந்தமான MiG-29 போர் விமானம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விழுந்து நொறுங்கியது.
எனினும் விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு, விமானம் தரையில் விழும் போது உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.
பிறகு அவசர பாதுகாப்பு சறுக்கு நாற்காலி உதவியுடன் தனதுயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
விமான செயல்முறையில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், சம்பவத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறையாகும்.
செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதே போன்ற MiG-29 போர் விமானம் விழுந்து நொறுங்கியது.