Latestமலேசியா

ஆசியான் பயிற்சி சந்தை மாநாடு 2025; செயல்திறன் பயிற்சிக்கு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்த மலேசியா

கோலாலம்பூர், ஜூலை 16- நேற்று Berjaya Times Square ஹோட்டலில் நடைபெற்ற ஆசியான் பயிற்சி சந்தை மாநாடு (ATMC) 2025 இல் பயிற்சி வழங்குநர்கள், முதலாளிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆசிய நாடுகளுக்கான பயிற்சி வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த நிகழ்வை மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமது (Dato’ Sri Abdul Rahman Mohamad) அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார். ஆசியானின் பொருளாதார எதிர்காலம், automation, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் இடையூறுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமென்று கூறியுள்ளார்.

மேலும் பயிற்சி முறைகளை சீர்திருத்த வேண்டிய அவசியம் இருப்பதோடு, அனைத்து துறைகளிலும், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு அணுகலை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை HRD Corp தலைவர் டத்தோ அபு ஹுரைரா அபு யாசித் (Datuk Abu Huraira Abu Yazid) வலியுருத்தியுள்ளார்.

ஆசியானின் பயிற்சி வழங்கலை மேம்படுத்துவன் வழி பொருளாதார திறன் இடைவெளி, புதுமை மற்றும் ஒத்துழைப்பை இணைத்தல் போன்ற கொள்கைகள் அமல்படுத்தப்படும்.

மேலும் AI-ஆற்றல் மிக்க பணியாளர்களுக்கான கற்றல் மற்றும் மேம்பாட்டு நிபுணர்கள் தங்களின் முன்னோக்குகளை வழங்கி மனித மூலதன உத்திகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!