Latest

ஆசியான் விளையாட்டு தொழில் எக்ஸ்போ 2025 அதிகாரபூர்வமாக தொடங்கியது

ஷா ஆலாம், அக்டோபர் 18 –

ஆசியான் விளையாட்டு தொழில் எக்ஸ்போ 2025 (ASEAN Sports Industry Expo 2025) இன்று ஷா ஆலாமில் உள்ள Setia City Convention Centre-இல் அதிகாரபூர்வமாக தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த எக்ஸ்போவை மலேசிய துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹித் ஹமிடி (Dr. Ahmad Zahid bin Hamidi), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யியோவுடன் (YB
Hannah Yeoh) இணைந்து திறந்து வைத்தார்.

அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறும் இந்நிகழ்வில் ஆசியான் நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 35,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திறப்புரையில் துணைப் பிரதமர், விளையாட்டை புதிய பொருளாதார வளர்ச்சியின் காரணியாக உருவாக்க மலேசியா மற்றும் ASEAN உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் விளையாட்டு தொழில் வளர்ச்சி, Environmental, Social & Governance (ESG) எனப்படுகின்ற சுற்றுச்சூழல், சமூக மற்றும் நல்லாட்சி மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என அமைச்சர் ஹன்னா, வலியுறுத்தினார்.

எக்ஸ்போவில் ஏழு நிறுவனங்களுக்கிடையே வணிக ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகி, 11 புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், Jualan Rahmah MADANI – விளையாட்டு தள்ளுபடி விற்பனை, தொழில் நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள், 5 கிலோ மீட்டரிலான ஓட்டப்பந்தயம் மற்றும் விளையாட்டு சவால் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அரசு விளையாட்டு துறையை வலுப்படுத்த 101 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான Geran Padanan Sukan, Kumpulan Wang Amanah Sukan Negara (KWASN) மற்றும் Dana Sukan Komuniti (DSK) மூலமாக ஆதரவைத் தொடரும் என்று அறிவித்தது.

இந்த எக்ஸ்போ, ஆசியான் விளையாட்டு தொழில்துறையை புதுமை, நிலைத்தன்மை மற்றும் போட்டித்திறன் கொண்ட பொருளாதார சக்தியாக முன்னேற்றும் தளமாக திகழ்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!